என் கவிதைகள் - இனிய நாள்
ஏப்ரல் 18, 2022
இனிய நாள்
என்று சொல்லால்
தாக்கிவிட்டு
கடந்துவிட்டாய்,
வளைந்த முதுகு தூக்கி
எடை தாங்கத் தடியூன்றி
சுருங்கிய முகம் கொண்டு
வரும் உன்னிடம்
பதில் தாக்குதல் நடத்த
தயாராகிக்கொண்டிருக்கிறேன்,
இனிய நாள் இனிய நாள் இனிய நாள்
என்று சொல்லிப் பயின்றுகொண்டு
காத்துக்கொண்டிருக்கிறேன்,
நீ சென்ற திசைநோக்கி.
Comments
Post a Comment