என் கவிதைகள் - நாளொரு மேனியும்...
ஏப்ரல் 14, 2022
கடிகாரக் கூச்சலில்
திடுக்கிட்டெழுந்து
காக்கைக் குளியலில்
துயில் விரட்டி
பசிக்காத வயிற்றில்
சோறு திணித்து
பனிரெண்டு மணி வயிற்றுக்கு
சோற்று மூட்டை கட்டி
நான்கு சக்கரங்களை விரட்டி
சாலையில் உராய்த்து
வழக்கமான கட்டத்திடையில்
செருகி அணைத்து
அடையாள அட்டையை
இயந்திர முனகலுக்கு
தின்னக்கொடுத்து
மின்தூக்கி தவிர்த்து
நாற்பத்தாறு படிகள் எண்ணி
மூச்சிரைக்க இருக்கையில் நுழைந்து
ஐந்து மணிச் சங்கை
எதிர்பார்த்து
காத்திருக்கத் தொடங்கினேன்.
Comments
Post a Comment