என் கவிதைகள் - கடவுள் கைவிடுதல்
ஏப்ரல் 17, 2022
உறங்கும் குழந்தை
கண்கள் மூடி
சிரித்தது
நாசிகளில் உன்னத வாசம்
காதுகளில் இனிய நாதம்
வானெங்கும் வண்ணப் பலூன்கள்
இளவேனிலில் உறைந்தது காலம்
மானுடம் காமம் மறந்து ஆனந்தித்தது
ஆலயங்களில் தனிமை பூத்தது
தத்துவத்தின் பக்கங்களில்
வெண்மை படர்ந்தது
கடவுள் ஒரு திருவிழாவில்
கைவிடப்பட்டார்
உறங்கும் குழந்தை
கண்களை மூடியவாறே
சிரித்துச் சிரித்து
உறங்கியது.
Comments
Post a Comment