என் கவிதைகள் - எடை
ஏப்ரல் 4, 2022
அதீதமாய் கனக்கிறது
கைப்பேசி
காத்திருப்பின் அடர்த்தியுடன்
பதில்கள் கைவிட்டுவிட்ட
சம்பிரதாய செய்திகள்
நிராதரவாய்
அலைகின்றன.
ஆவேசமாய் அழிக்கிறேன்,
செய்திகள் மறைந்த சில நொடிகள்…
துளிர்த்தது ஒரு இரவு வணக்கம்,
உறங்கச் சென்றேன்
மீண்டும் கனக்கும்
கைப்பேசியுடன்.
Comments
Post a Comment