மூன்று பயிற்சிக் கவிதைகள்

                                          

   

நாட்குறிப்புகளின் பக்கங்களில் அலைந்துகொண்டிருந்தபோது இந்தக் கவிதைகளை மீண்டும் வாசித்தேன். சென்ற வருடம் ஒருநாள் இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து சொற்ப எண்ணிக்கைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தனியாக எழுதி வைத்தேன். அந்தப் பட்டியலில் இது போன்ற பல கவிதைகளைத் தவிர்த்தேன், இவற்றை கவிதை எழுதப் பயிழும் ஒருவனுடைய அசட்டு முயற்சிகள் என்று மட்டுமே கொள்ளலாம். கவிதைகளை எழுதிய நாட்களைக் குறித்து வைப்பதும் பயனுள்ளதாகவே தெரிகிறது,


பிப்ரவரி 10, 2019

என்றோ உறைந்த பனி

இன்று உருகிக்கொண்டிருந்தது,

அதன் ஓசையில்

ஓர் அருவியின்

மென் குரல்.


டிசம்பர் 28, 2019

இந்த கிருஸ்துமஸ்

விளக்குகளிடம்

யார் சொல்வது


கிருஸ்துமஸ் தினம்

முடிந்துவிட்டதென!


ஏப்ரல் 1, 2019

பறந்து விரிந்த வானம்

அதில் சிறு துளியாய்

விமானம்


தலைகீழாய்க் கவிழ்த்துவிட்டேன்


வானம் கடலாகியது

விமானம் மீனாகியது


நான்?


  - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை