என் கவிதைகள் - வெற்றிடம்

                                            


ஏப்ரல் 22, 2022

ஒரே வரிசையில்தான்

நின்றுகொண்டிருந்தோம்

செல்லும் பாதை எதிர்திசையில்

நீண்டுகிடந்தது

நொடியில் வரிசை விலகி

வந்த திசை நோக்கித் திரும்பிவிட்டாய்

ஒரு புத்தகத்தின் ஒரே பக்கத்தின்

ஒரே பத்தியின் ஒரே வார்த்தையைத்தானே

வாசித்துக்கொண்டிருந்தோம்,


செல்லும் இடத்துக்கு யாரும் அறியாத

இரகசிய வழி வைத்திருக்கிறயா

அளிக்கத் தவறிய முத்தத்தின்

நினைவா

கேட்கத் தயங்கிய மன்னிப்பின்

நெருடலா

உன்னை உருவாக்கிய வேர்கள்

நோக்கிய பிரிவாற்றாமையா

எது உன்னை நடத்தியது?


எதுவாகினும்,

நீ உருவாக்கிய வெற்றிடம்

சாலையில் இன்னும்

தனித்தீவாய்த் தவிக்கிறது!


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை