உயிர்மை இதழ், மதார் கவிதைகள் - ஒரு வாசிப்பு

                                            


'உயிர்மை' இதழில் கவிஞர் மதாரின் ஆறு கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசித்துவிட்டு அதைத் தொகுத்துக்கொள்ள எழுதிய ஒரு சிறிய குறிப்பு,

1. பதினெட்டு கதவுகள்

இதுபோன்ற கவிதைகளை வாசிக்க அதன் குறியீட்டு சாத்தியங்களைப் பற்றி ஒரு வாசகனாக சிறு தேடல் தேவைப்படுகிறது. பதினெட்டு கதவுகள் என்பதை வேறு மதநம்பிக்கைகள் கொண்டவர்களை ஏற்றுக்கொள்ளும் போக்கை வெளிப்படுத்த யூதர்கள் பயன்படுத்தும் ஒரு குறியீட்டுச் சொல் என்று கூகுள் சொல்கிறது. அதைத் தாண்டி திறந்த மனதோடு வாழ்வை அணுகும் ஒரு போக்கை இந்தக் கவிதை பேசுவதாக வாசிக்கிறேன்.

2. ஞாபக மறதி

ஒரு ஞாபக மறதி தத்துவார்த்தமாக முடிவடைகிறது இந்தக் கவிதையில்.

3. இரண்டு இரகசியங்கள்

இந்தக் கவிதை கொஞ்சம் பொருள் மயக்கம் தருகிறது, பூடகமாகவும் இருக்கிறது. இந்த இரகசியத்தைச் சொல்பவன் யார், அல்லது சொல்பது எது? ஒரு இரகசியம் எப்படி இரு இரகசியங்களாகிறது? தலைப்பில் ஒளிந்திருப்பது எதைக் குறிக்கிறது? எனக்கு பிடிபடவில்லை, மதாருடைய 'கிணறு' கவிதையைப் போல இருக்கிறது. உள்ளிருந்து கேட்கும் அந்த இன்னொருவன் வயிற்றில் உள்ள ஒரு குழந்தையா?

4. சொர்க்கம் நரகம்

இந்தக் கவிதை ஒரு நேரடி அரற்றலாகவே தோன்றுகிறது. சொர்கத்திற்கும் நரகத்திற்குமன ஒரு இடைவெளியை வினவுகிறது. 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் நினைவில் எழுகிறது. ஒவ்வொரு நல்லுறக்கமும் சிறு மரணம்தானோ? இன்னும் விரிவான பார்வையில் அணுகவேண்டிய கவிதை என்று மட்டும் தெரிகிறது.

5. திடகாத்திர ஆள்

ஒரு தோற்றத்தின் இறுக்கத்தை ஒருவனுடைய தலையில் விழும் கொத்துப்பூக்கள் விலக்கிவிடுகின்றன. ஒரு மனிதனை பூ அற்பமாக்கிவிடுகிறது. இந்தக் காட்சியில் உள்ள அழகிய முரண் கவர்கிறது. ஆனந்த்குமாரின் 'ஒழுக்கவாதி' கவிதையை எண்ணிக்கொள்கிறேன்.

6. விளைச்சல்

மிகச் சிறந்த ஒரு கவிதை இது. கவிஞனின் சில ஆழமான புரிதல்களை அல்லது தேடல்களை வார்த்தைகளால் கடத்துகையில் அருவத்தன்மை வந்துவிடுகிறது. வாசகனாக அதன் அருவத்தன்மைக்குள் அலைந்துவிட்டு வருவது மட்டுமே நாம் செய்யக்கூடுவது. புரவி இதழில் வெளிவந்த மதாரின் 'சிகப்பு' கவிதையை ஒட்டிய ஒரு கவிதை இது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை