http://kavithaigal.in தளம் - ஒரு கடிதம்
எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் அக்டோபர் 15, 2021 ஒரு செய்தியை வாட்ஸப்பில் பகிர்ந்திருந்தார். கவிதைகளுக்கான பிரத்யேக இணையதளம் ஒன்றை அமைத்திருப்பதாகவும், இது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வெளிவரும் என்றும் சொல்லியிருந்தார். அந்தச் செய்தியை ஒட்டி தளத்தின் ஆசிரியர் குழுவுக்கு என் எண்ணங்களைப் பகிர்ந்து ஒரு கடிதம் எழுதினேன். அதன் திருத்தப்பட்ட பிரதி இங்கு பதியப்படுகிறது, கடிதம் எழுதப்பட்ட நாள்: அக்டோபர் 23, 2021. அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு , வணக்கம் . நான் ஒரு கவிதை வாசகன் , அல்லது அப்படித்தான் அறியப்பட விரும்புகிறேன் . கவிஞர்களில் தேவதேவன் , விக்ரமாதித்யன் , ஆத்மாநாம் , பசுவய்யா , அபி , ஞானக்கூத்தன் , கல்யாண்ஜி , கலாப்பிரியா என்றும் கொஞ்சம் அடுத்த தலைமுறைகளான இசை , போகன் சங்கர் , இளங்கோ கிருஷ்ணன் , மதார் , வேணு வேட்ராயன் என்றும் கலந்து வாசித்துக்கொ...