என் கவிதைகள் - பாதைகள்
ஜூன் 4, 2023
அன்பின் மலர்கள்
அற்புதமானவை
என்றுதான் நீங்கள்
அதை,
அவற்றை,
ஏற்றுக்கொள்கிறீர்கள்
அதன்,
அவற்றின்,
அற்புதங்கள் வலுவாக
உரைக்கப்படுகின்றன
உங்களுக்கு,
ஒரு தேவாலயத்தின்
மணிபோல
ஒரு கோபுரத்தின்
கூர்மைபோல
அவை
உங்களை வந்தடைகின்றன,
ஓசைகளை
வலிகளைத் துறந்துவிட்ட
துறவியொருவன்
ஆடையின்றி
ஓடிக்கொண்டிருக்கிறான்
பிரபஞ்சத்தின்
அற்புதப் பாதைகளில்.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment