என் கவிதைகள் - தொடுகை
பிப்ரவரி 18, 2023
உனக்கு அனுப்ப எண்ணாத
கடிதமொன்றை
தபால்பெட்டி வஞ்சமகமாய்ப்
பறித்துக்கொண்டது
மேற்கூரைகளற்ற குடிலுக்குள்
உறங்கும் குழந்தைகளாய்
வார்த்தைகளின்
மென்மூச்சு
கடிதங்களுக்குள் உறங்கும்
சர்ப்பத் தீண்டலில்
சொருகும் உன் கண்களில்
என்னின் பிம்பம்
உன்னுடைய என்னுடைய
காதல்களின்
பிரதிபிம்பமாய்
உன் வார்த்தைகள்
என் சர்ப்பங்கள்
நம்
தபால்பெட்டிகள்.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment