என் கவிதைகள் - நீலம்

                                             

நவம்பர் 18, 2022

மிக அருகில்

முச்சுவிடும்

அறையொன்றில் அமர்ந்திருந்தான்

ரோன் நகரின்

நட்சத்திர இரவு

சுவரில் நெளிந்துகொண்டிருந்தது

உடலை விரும்புபவன்

அதன் மீதான

பரிசோதனைகளை வெறுக்கிறான்

தேர்வுகளில் பிழைசெய்த

மாணவனின்

பரீட்சை முடிவுகளுக்கான

காத்திருப்பாய்

அவன் தத்தளிப்பு

மனநலக் காப்பகம் நோக்கி

மெல்ல நடக்கிறான்

வின்சென்ட் வில்லியம் வான்கோ.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை