என் கவிதைகள் - அந்தகாரம்
நவம்பர் 12, 2022
வேனிற்கால புலரி
உறங்கிப் புரளும்
குழந்தையின் அருகாமைத் தலகணையாய்
நெகிழ்ந்தது
குளிர்கால இரவு
வீடற்ற குருட்டுப் பிச்சைக்காரனின்
துப்பட்டியில் ஊடுருவி
கெக்கலிதது
கவிஞன்
உக்கிரமான மதியவெயிலில்
தகிக்கும் சாளரமற்ற அறையில்
வியர்வையுடன் மதுவருந்துகிறான்
காகமொன்று
காலமற்ற வெளியின்
உச்சிக்கிளையில் அமர்ந்து
அவலமாய்க் கரைந்தது.
Comments
Post a Comment