என் கவிதைகள் - நிறை
நவம்பர் 13, 2022
குருட்டுப் பிச்சைக்காரன்
நூறுரூபாய்த் தாளை
தானே இட்டுக்கொள்கிறான்
முதல்போனியாக,
ஆழக் கிணற்றுக்குள்
எறியப்பட்ட பொருட்களாய்
சில்லறைக் காசுகளின்
ஆரவாரம்,
காதுகளைப் பொத்திக்கொண்ட
கடவுள்
மெல்ல விடுவிக்கிறான் கைகளை,
வழிந்துகொண்டிருந்தது
அட்சயப்பாத்திரம்.
Comments
Post a Comment