என் கவிதைகள் - கீதம்

                                                 

நவம்பர் 19, 2022

என்றோ உறைந்துவிட்ட

கடிகாரத்தை

உயிர்ப்பித்தான்

முற்களை எதிர்காலமொன்றில்

நிறுத்தினான்

நாற்காலியில் சௌகர்யமாய்

அமர்ந்துகொண்டு

கேட்கத் தொடங்கினான்

எதிர்திசையில் சுழன்று

மௌனத்தை சீராக உடைக்கும்

காலத்தின் மழலையை.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை