விசும்பு தொகுப்பு - வாசிப்பனுபவம்
விசும்பு தொகுப்பின் கதைகளுக்கான தனிக் குறிப்புகள் கீழ்க்கண்ட கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வெளியாகியுள்ளது. கட்டுரை எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 1, 2022. வெளியான நாள்: டிசம்பர் 28, 2022. விசும்பு – ஒரு வாசிப்பு தமிழில் அறிவியல் புனைக்கதைகளை சுஜாதா எனும் ராட்சஸ உருவத்தின் நிழல் படியாமல் எண்ணிப்பார்க்க இயலாது . இந்தக் குறிப்பை எழுதுவதற்காக சுஜாதாவின் சில அறிவியல் புனைக்கதைகளை இணையத்தில் மீள் வாசிப்பு செய்தேன் ( www.sirukathaigal.com ). முதல் சில கதைகளில் ஆச்சரியமும் பகடியுமாக நம்மை ஆக்ரமித்து மூன்று நான்கு ஐந்து ஆறாம் கதைகளில் ஒரு எழுத்தாளன் வாசகனுடன் நிகழ்த்தும் சுவாரசிய விளையாட்டாக மட்டுமே எஞ்சி சலிப்புணர்வை அளிக்கின்றன . அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள் இந்திய மண்ணில் அமர்ந்திருப்பவை , அறிவியலின் மிகைச் சாத்தியங்களைக் கையாளு பவையாகவோ, அல்...