Posts

Showing posts from 2023

2023 - வாசித்த புத்தகங்கள்

Image
                                               2023 ம் வருடத்தில் வாசித்தவற்றை திரும்பிப் பார்த்தேன்; 34 புத்தகங்கள் என்று கணக்கு வருகிறது. இதில் பாதிக்குமேல் டிசம்பர் மாதம் வாசித்தவை, மோசமில்லை! கவிதை -  1. தேவதேவன் கவிதைகள், முழுதொகுப்பு 2. பாதி பழுத்த கொய்யாவைப்போல பூமி, இந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள், மொழிபெயர்ப்பு எம். கோபாலகிருஷ்ணன் 3. சுந்தர ராமசாமி கவிதைகள், முழுதொகுப்பு 4. தொடுதிரை, கல்பற்றா நாராயணன், மொழிபெயர்ப்பு ஜெயமோகன் 5. வேணு தயாநிதி கவிதைகள் 6. ஆத்மாநாம் கவிதைகள் நாவல் -  1. நீலம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 2. பிரயாகை, வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 3. ரப்பர், நாவல் - ஜெயமோகன் 4. வெண்முகில் நகரம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 5. Resurrection, Leo Tolstoy 6. ஆலம், நாவல் - ஜெயமோகன் 7. Hailstone, Graphical Novel 8. இந்திர நீலம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 9. அபிதா, நாவல் - லா.சா. ராமாமிர்தம் 10. காதுகள், நாவல் - எம்.வி. வெங்கட்ராம் 11. கிருஷ்ணப் பருந்து, நாவல் - ஆ. மாதவன் 12. சஞ்சாரம், நாவல் - எஸ். ராமகிருஷ்ணன் 13. மிதவை, நாவல் - நாஞ்சில் நாடன் சிறுகதை -  1. பின் நவீனத்துவவாதியின

Leo - பொழுதுபோக்கு சினிமா எனும் கவனச் சிதைப்பின் கலை

Image
                                                       Leo திரைப்படத்தை Netflix தளத்தில் தொடர்ச்சியாக இரண்டே முக்கால் மணிநேரம் பார்த்தேன். இது போன்ற பொழுதுபோக்கு படங்கள் ஏன் இத்தனை பிரபலமடைகின்றன என்று சிந்திக்கையில் தோன்றியவற்றை தொகுத்துக்கொள்ளவே இந்த பதிவு -  முதலில் பொழுதுபோக்கு திரைப்படங்களை பார்க்க எனக்கு நானே விதித்துக்கொள்ளும் விதிகள் உள்ளன, 1. 'லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்' போன்ற அபத்தங்களை அறிந்துவைத்திருப்பதில் குற்றவுணர்வு கூடாது. 2. நமக்குள் வாழும் இலக்கிய வாசகன், கலைப்படங்கள் மட்டுமே பார்ப்பவன் போன்ற இறுக்கதாரிகளை கர்வகொழுந்துகளை சில மணிநேரங்கள் 'எங்காவது சென்று தொலை எழவே' என்று அவிழ்த்துவிடவேண்டும். 3. படம் பார்த்து முடிந்ததும் மூன்று மணிநேரத்தை விரயம் செய்துவிட்டோமே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை. 4. பொழுதுபோக்கு திரைப்படங்கள் அளிக்கும் Hangover மனதில் பல நாட்கள் தொடரும். அதை முழுமையாக கழுவ கலை போன்ற நமக்கே உரிய சுழற்சிகளில் சில நாட்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும். பெரும் செலவில் எடுக்கப்படும் பொழுதுபோக்கு படங்கள் மிக துல்லியமாக திட்டமிடப்படுகின்றன. படத் தயாரிப

மேசன்களின் உலகம் - கவிஞர் வேணு தயாநிதி

Image
                                                  கவிஞர் வேணு தயாநிதி 'காஸ்மிக் தூசி' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். சொல்வனம் , அகழ் , பதாகை ,  kavithaigal.in போன்ற பல இணைய இதழ்களில் அவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. தன்னுடைய கவிதைகளைத் தொகுத்து அதன் வரைவை வாசிக்க அனுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய கடிதம் இங்கே, அன்புள்ள வேணு, தொகுப்பை இரண்டு முறை வாசித்தேன், பெரும்பாலான கவிதைகளை பலமுறை வாசித்துவிட்டேன். கவிதைகள் குறித்து தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்கிறேன். கவிதைகளை தொகுப்பாக வாசிக்கையில் கவிஞனுடைய அக மற்றும் புறச்சூழல் குறித்த சித்திரம் வாசகனின் மனதில் உருவாகிவிடுகிறது; அது ஒருவகையில் இயல்பானது என்றே எண்ணுகிறேன். எனக்கும் உங்கள் தொகுப்பை வாசிக்கையில் வேணு தயாநிதி எனும் கவிஞனுடைய சூழல் குறித்த ஒரு பார்வை கிட்டியது; அல்லது அதை நான் என்னுடைய வாசிப்பில் உருவாக்கிக்கொண்டேன். முதலில் புறச்சூழலைப் பார்ப்போம் – இதையே இரண்டாகப் பிரித்துக்கொள்கிறேன் – மேப்பிள், பிர்ச், பைன், அணில், ஏகார்ன் பழம், வெண்பனி, பூங்கா, ஏரி, பறவைகள், அம்முக்குட்டி என தற்போதைய மினியாபொ

என் கவிதைகள் - அறை

Image
                                                       நவம்பர் 19, 2023 ரஸ்கோல்நிகோஃவின் அறையை வாடகைக்கு எடுத்தேன் சல்லிசான விலைக்கு கிடைத்தது பின்நவீனத்துவவாதியின் மாலைப்பொழுதை முன்பதிவு செய்தேன் நிபந்தனைகள் விதித்த கொசுறுகள் தாண்டி புன்னகையோடு அணைத்துக்கொண்டார் தொல்மரபாளனின் உறக்கமற்ற இரவை காத்திருந்து குழந்தையென பொத்திக்கொண்டேன் இரண்டு நதிகளுக்கிடையில் நீளும் சாலையில் என் பயணம் அசதியான பயணியின் வசீகரங்களை பூர்த்திசெய்ய எனக்களிக்கப்பட்ட மதுக்கோப்பையை முலைமறந்த குழந்தையின் நினைவென கவ்விக்கொள்கிறேன் முடிவுறா இந்த மாலையில்.   - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பிராணி

Image
                                                     நவம்பர் 18, 2023 அது என்னிடம்  எப்படி வந்தது என்று தெரியவில்லை நான் ஒரு டைனோசரை வளர்த்துக்கொண்டிருந்தேன் அது என்னை விழுங்கி வளர்ந்துகொண்டிருந்தது சலனமற்ற இரவில் அலறும் பெயரற்ற காட்டு விலங்கைப் போல எதிர்பாராத வேளைகளில் என் கட்டுகளை மீறி உறுமித் திமிறும் ஒரு நாள் பூங்காவில் விளையாடும் குழந்தையிடமிருந்து வெளியேறிய குட்டி டைனோசரைக் கண்ட அந்த தருணம் புரிந்துவிட்டது  எனக்கு எல்லாமும்.      - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - காலணிகள்

Image
                                                  நவம்பர் 5, 2023 நம்மைத் தொலைக்க நெடும் பயணங்கள் தேவையில்லை வெற்றுக் கால்களில் சில மைல்கள் ஓடிக் கடக்கலாம் ஓடியும் கலைக்கலாம் நம் காலடிகளை அந்த ஊரிலிருந்து சில கடிதங்களை எழுதலாம் அவற்றை வாசிக்காமல் நெருப்பிலிட்டால் போதும் ஊதி விளையாடி சுழன்று திளைக்கலாம் நம் விலாசங்களின் ஞாபகப் பரப்பை காற்று மீட்டும் மின்சாரக் கம்பிகளில் நம் காலணிகள்.   - பாலாஜி ராஜூ

பூன் இலக்கிய முகாம் - எனது கடிதம்

Image
                                                  ஆசிரியருக்கு, அமெரிக்காவில் இலையுதிர் காலம் மனதிற்கு இனியது. மரங்களின் வண்ணப் புன்னகைகளை எங்கும் காணலாம். மொத்த சூழலும் நிறங்களடர்ந்த ஒரு ஓவியத்தைப் போல காட்சியளிக்கும். வடக்குப் பகுதியில் தொடங்கும் இந்த நிற மாற்றம் தெற்கு நோக்கி சில வாரங்களில் நகரும். கொலம்பஸ் நகரிலிருந்து பூன் முகாம் நோக்கி ஏழு மணிநேரம் காரில் பயணம். சாலைகளெங்கும் புதிதாக சுதந்திரம் பெற்ற இலைகள் எனது வாகனத்தை வழிமறித்து துரத்திக்கொண்டிருந்தன. கிராமத்துக்குள் அரிதாய் நுழையும் வாகனத்தைச் சூழ்ந்து ஓடிவரும் சிறுவர்கள் என இலைகளை கற்பனை செய்துகொண்டேன். மாலை நான்கரை மணியளவில் முகாமிற்கான இடத்தை அடைந்தேன், சில நண்பர்கள் எனக்கு முன்னரே வந்திருந்தனர். இந்த முறையும் Cabin என்றழைக்கப்படும் மர வேலைப்பாடுகளால் ஆன மலை பங்களாவில் முகாமை ஒருங்கிணைத்திருந்தனர். தங்குவதற்காக அருகருகில் வசதியான நான்கு மலை வீடுகள். இலக்கிய அமர்வுகளுக்காக மைய பங்களாவின் அருகில் Barn என்று சொல்லத்தக்க ஒரு கூடம். பங்களாவைச் சுற்றிய சரிவுகளில் சீரான வரிசைகளில் கிருஸ்துமஸ் மரங்கள் டிசம்பர் மாதம் நோக்கி வளர

கி. ராஜநாராயணன் இசையினூடாக - ஒரு குரல் முயற்சி

Image
                                               ஒவ்வொரு முறை என்னுடைய குரலைக் கேட்கும் போதும் சிறு திகைப்பு ஏற்படும். எனக்கு தொடர்பே இல்லாத ஒரு அந்நியனின் குரல் போல அது ஒலிக்கும், ஒருவகை முரட்டுக் குரல். செப்டம்பர் 5, மாலை ஆறுமணி அளவில் இசையமைப்பாளரும் அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் உறுபினருமான ராஜன் சோமசுந்தரம் 'நேரமிருக்கையில் அழைக்கவும்' என ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரிடம் சென்ற ஆண்டு பூன் காவிய முகாமில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராஜன் என்னுடைய குரல் மிக வலுவான ஒன்று என ஒரு உரையாடலில் சொல்லியிருந்தார் (Strong Base Voice).  பத்து நிமிடங்களில் அவரை அழைத்தேன், "உங்கள் குரலுக்கு ஒரு வேலை வந்திருக்கிறது" என்றார். 'என்னுடைய குரலுக்கு ஒரு வேலையா!' என்று சற்று துணுக்குற்று அவர் மேலும் பேசக் காத்திருந்தேன். எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்பிக்க, 'கோபல்ல கிராமம்' நாவலில் இருந்து ஒரு கும்மிப்பாட்டை எடுத்து இசையமைத்து வெளியிடும் முயற்சியில் இருப்பதாகவும், அதற்கு ஒரு முன்னோட்ட காணொளி தயாரிப்பதாகவும்

ஆந்மாநாம் என்றொரு கவிஞன் - கவிதைகள் இதழ்

Image
                                                         செப்டம்பர் மாத கவிதைகள் இதழில் கவிஞர் ஆத்மாநாம் கவிதைகள் குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது, அதன் பிரதி கீழே -  ஆத்மாநாம் என்றொரு கவிஞன் – கவிஞர் ஆத்மாநாம் குறுகிய காலத்தில் தமிழ் நவீனக் கவிதைகளின் மீது ஆழமான தாக்கத்தைச் செலுத்தியவர். ஆத்மாநாம் மறைந்து நாற்பதாண்டுகளாகியும் அவருடைய கவிதைகள் இன்றைய நவீனக் கவிஞர்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. இளங்கோ கிருஷ்ணன், பெருந்தேவி இருவரும் ஆத்மாநாமை தம் கவிதைகளில் நேரடியாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள், இன்னும் பல கவிஞர்களும் இந்த வரிசையில் இருக்கலாம். ஆத்மாநாம் ஒரு நகரவாசி. சென்னை போன்ற ஒரு நகரம் அவர்மீது செலுத்திய ஆழ்ந்த தாக்கத்தையும், ஒரு பெருநகரச் சூழலின் மீதான அவருடைய எதிர்வினைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். ஒரு புரிதலுக்காக அவருடைய கவிதைகளை ஓவியம் இசை இலக்கியம் ஆகிய நுண்ணிய கலைகளில் பரிச்சயம் கொண்ட, மெல்லுணர்வும் கூர்மையும் அமைந்த ஒரு நகரத்து மனிதனின் அகச்சித்திரங்கள் என்று வகைப்படுத்தலாம். ஆத்மாநாம் சமூக அவலங்களை நோக்கி