என் கவிதைகள் - பிராணி
அது என்னிடம்
எப்படி வந்தது
என்று தெரியவில்லை
நான் ஒரு டைனோசரை
வளர்த்துக்கொண்டிருந்தேன்
அது என்னை விழுங்கி
வளர்ந்துகொண்டிருந்தது
சலனமற்ற இரவில்
அலறும் பெயரற்ற
காட்டு விலங்கைப் போல
எதிர்பாராத வேளைகளில்
என் கட்டுகளை மீறி
உறுமித் திமிறும்
ஒரு நாள்
பூங்காவில் விளையாடும்
குழந்தையிடமிருந்து வெளியேறிய
குட்டி டைனோசரைக் கண்ட
அந்த தருணம்
புரிந்துவிட்டது
எனக்கு எல்லாமும்.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment