என் கவிதைகள் - காலணிகள்

                                        

நவம்பர் 5, 2023

நம்மைத் தொலைக்க

நெடும் பயணங்கள் தேவையில்லை

வெற்றுக் கால்களில்

சில மைல்கள்

ஓடிக் கடக்கலாம்

ஓடியும் கலைக்கலாம்

நம் காலடிகளை

அந்த ஊரிலிருந்து

சில கடிதங்களை

எழுதலாம்

அவற்றை வாசிக்காமல்

நெருப்பிலிட்டால் போதும்

ஊதி விளையாடி

சுழன்று திளைக்கலாம்

நம் விலாசங்களின்

ஞாபகப் பரப்பை

காற்று மீட்டும்

மின்சாரக் கம்பிகளில்

நம் காலணிகள்.

  - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை