என் கவிதைகள் - அறை

                                            


நவம்பர் 19, 2023

ரஸ்கோல்நிகோஃவின் அறையை

வாடகைக்கு எடுத்தேன்

சல்லிசான விலைக்கு

கிடைத்தது


பின்நவீனத்துவவாதியின் மாலைப்பொழுதை

முன்பதிவு செய்தேன்

நிபந்தனைகள் விதித்த

கொசுறுகள் தாண்டி

புன்னகையோடு

அணைத்துக்கொண்டார்


தொல்மரபாளனின் உறக்கமற்ற

இரவை காத்திருந்து

குழந்தையென

பொத்திக்கொண்டேன்


இரண்டு நதிகளுக்கிடையில்

நீளும்

சாலையில்

என் பயணம்


அசதியான பயணியின்

வசீகரங்களை

பூர்த்திசெய்ய

எனக்களிக்கப்பட்ட

மதுக்கோப்பையை


முலைமறந்த

குழந்தையின் நினைவென

கவ்விக்கொள்கிறேன்

முடிவுறா

இந்த மாலையில்.

  - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை