சிவமயம் சிறுகதை, ஜெயமோகன் - ஒரு பார்வை
' சிவமயம் ' எழுத்தாளர் ஜெயமோகனின் தொடக்ககாலச் சிறுகதைகளில் ஒன்று, 1992ல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்களுடனான மாதாந்திர இலக்கியக் கூடுகையில் சிறுகதையொன்றை விவாதிக்க முடிவு செய்தோம். அதற்கு நண்பர் ஜெகதீஷ் குமார் இந்தக் கதையைப் பரிந்துரைத்தார். சிறுகதையை வாசித்துவிட்டு அதன் மீதான என் எண்ணங்களைத் தொகுத்துக்கொள்ள இந்தப் பதிவை எழுதுகிறேன். சுகவனேஸ்வரர் என்றழைக்கப்படும் சிவனின் ஒரு வடிவம் குடிகொண்டிருக்கும் கோவிலொன்றில் நிகழும் கதையை ஒற்றி ஆசிரியர் சிறுகதையை அமைத்திருக்கிறார். இந்தக் கோவில் சேலத்தில் இருப்பதாகவும், கோவிலை ஒட்டிய தொன்மக் கதையொன்றையும் இணையத் தகவல்கள் அறிவிக்கின்றன. கதையில் சுகவனேஸ்வரர் குடிகொண்டிருக்கும் லிங்க வடிவச் சிவன் உள்ள கோவில் அதிகக் கவனிப்பற்று இருக்கிறது. சிவனுக்கான பூஜைகள் செய்யும் சம்பு குருக்கள், அங்கு வந்து தங்கி கோவிலைப் பிரசித்தி பெறவைத்த '...