Posts

Showing posts from May, 2025

உறம்பரையான், சிறுகதை

Image
                                                    அந்திமழை இதழ் சுட்டி                                         நா ங்கள் முத்துசாமி தாத்தாவின் வீட்டு வாசலில் கதை கேட்க ஆயத்தமானோம் . நாங்கள் என்றால் நான் , சக்திவேல் , ராஜா அப்புறம் உறம்பரையான் சுப்பிரமணி . உறம்பரையான் என்றால் அசலூர்காரன் அல்லது விருந்தாளி . எங்கள் ஊருக்கு கிழக்கே இரண்டு மைல்கள் தூரத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தை சார்ந்த சுப்பிரமணி , கொட்டமுத்து என்று அழைக்கப்படும் நல்லதம்பி மாமாவுக்கு சொந்தம் . சுப்பிரமணி அவ்வப்போது நல்லதம்பி மாமா வீட்டில் இருப்பான் . ஊருக்கு வருகையில் எங்களோடு , குறிப்பாக என்னோடு சேர்ந்து விளையாடவும் கதை கேட்கவும் இணைந்துகொள்வான் . முத்துசாமி தாத்தாவுடையது பழைய ஓட்டுவீடு . அதில் இரண்டு அறைகளும் நீண்ட...