கோதுமை மணி, மலர்விழி மணியம் - வல்லினம் இதழ்

ஒரு சிறுகதையில் உச்ச நிகழ்வின் காரணத்தை முதல் பத்தியிலிருந்து தொடங்கி கதை முழுக்க நகர்த்துவது, உறுத்தாத வட்டார வழக்கு, கதையின் களமான நெய்தல் நிலம் அளிக்கும் காட்சிக் கூர்மை, கதையின் இரண்டு மையக் கதாப்பாத்திரங்களின் தனித்தன்மை, பைபிளின் ஒரு கூறு என எல்லாம் ஒரே புள்ளியில் முயங்கி தீர்க்கமான படைப்பாக மாறுவது அரிய நிகழ்வு. படைப்பாளியின் திறனை வியந்தாலும், இவையெல்லாம் ஒன்று கூட தற்செயலின் தவிர்க்கமுடியாத பங்கு ஒன்றும் இருக்கிறது. இவையெல்லாமும் கூடிய ஒரு சிறுகதையை சமீபத்தில் வாசித்தேன். வல்லினம் இதழில் வெளிவந்த மலர்விழி மணியம் எழுதிய ' கோதுமை மணி ' சிறுகதை அத்ததையது. கதை குறித்த பார்வையை விஷ்ணுபுரம் குழுவில் பகிர்ந்தேன். "அப்பழுக்கற்ற அன்பு, தாய்மை எனும் அடிப்படை உணர்வு, எதையும் எதிர்பாராத தியாகம் ஆகிய மானுடத்தின் அரிய அம்சங்களை கடலோர கிராமமான முட்டத்தின் ப...