சுதந்திர தினம் - கவிதை
ஜூலை 4, 2026
சுதந்திர தினம்
என்பது என்ன?
ஒளிரும் வண்ணங்களில்
சட்டைகளை
அணிந்துகொள்வது,
சுதந்திர தினம்
என்பது என்ன?
அதீதமாய் உணர்ச்சிவசப்படுவதை
புனிதம்
என்று நியாயப்படுத்துவது,
சுதந்திர தினம்
என்பது என்ன?
காலையில் எழுந்ததும்
அருந்தும் மதுவை
இரவு வரை புசிப்பது,
சுதந்திர தினம்
என்பது என்ன?
என்றோ ஏங்கிய
இனிப்பு மிட்டாய்களை
மறப்பது,
சுதந்திர தினம்
என்பது என்ன?
உவரும் வண்ணத்தின்
எடையால்
அசையாமல் மூச்சு முட்டும்
ஒரு சொல்,
சராசரி நாளொன்றில்
தன்போக்கில்
ஒரு கொடியாய்
அற்புதத்தின் உச்சமாய்
சோம்பேறித்தனமாய்
நெளிவது.
- பாலாஜி ராஜூ

Comments
Post a Comment