நானும் அவனும் - கவிதை
மே, 2025
மழை பெய்கிறது,
வாகனத்தை நிறுத்தி
காத்திருக்கிறேன்
நனையாமல்
வீட்டினுள் நுழைய,
துப்பாக்கி வெடிக்கிறது
கெண்டைக்கால் சிலிர்த்து
ஆயத்தமாகிறான்
பந்தய வீரன்
காற்றைக் கீறி
கோட்டைக் கடக்க,
ஓடினோம்
வாகனத்தை அணைக்க
அழுத்திய சாவியுடன்
நானும்
துப்பாக்கி வெடியொலி
எதிரொலிப்பை
உணர்ந்த
அவனும்...
கதவு திறந்தது
கோடு மறைந்தது
இளைப்பாறுகிறோம்,
வீட்டின் நிசப்தத்தில்
அவனும்
மைதானக் கூக்குரல்களூடே
நானும்.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment