Posts

Showing posts from April, 2023

என் கவிதைகள் - அளிக்கப்படுபவை

Image
                                                       மார்ச் 31, 2023 என்னுடைய சேமிப்புகளில் வசந்தகாலங்கள் எண்பெருக்காய்க் கிடந்தன கடவுள் ஒரு தாராளவாதி, எண்ணிக்கையறியா செலவாளியாக நண்பர்கள் உறவினர்கள் எதிர்படும்  வயதான காதலர்கள் என பரிசளித்தேன், உண்ணாத பழங்களாய் வீணடித்தேன், மருந்துகளை வெறுக்கும் நோயாளியாய் தந்திரமாய் வீசியெறிந்தேன் வறியவனானேன், துயிலற்ற இரவுகளில் எண்ணிக்கைகளைக் கணக்கிட்டு பெருமூச்சுவிடுபவனாகவும் புதிதாக யாசகம் செய்பவனின் தயக்கத்துடன் கடன் கேட்பவனாகவும் யாசகமிட்டவற்றை திரும்பப் பெறும் குரூரியாகவும் மாறினேன், மூன்று வயது பாலகனிடம் வசந்தகாலங்களை வழிப்பறி செய்பவனாகவும்.     - பாலாஜி ராஜூ

கரூர் டைரீஸ், கோவை பயணம் - 3

Image
                                                                 இளம் எழுத்தாள நண்பர் நவினைச் (நவீன் அல்ல) சந்திக்க கோவை கிளம்பினேன். சனிக்கிழமை (ஏப்ரல் 22, 2023) காலை எட்டரை மணிக்கு காரில் கிளம்பி பதினொன்றே முக்காலுக்குச் அவருடைய வீட்டை அடைந்தேன். நூற்றி அறுபது கிலோமீட்டர் மேற்கு நோக்கிய பயணம், கிட்டத்தட்ட மூன்றே முக்கால் மணிநேரம். கோவை நகரம் அடர்ந்து பிதுங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி ஒருமணிநேரம் நகருக்குள் நெரிசலில் வண்டியை மெல்ல நகர்த்திக்கொண்டு ஓட்டியது சிறிய சலிப்பை ஏற்படுத்தியது. நவினின் வீடு மருதமலையிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்த ஒரு அழகான குடியிருப்பு. குடியிருப்பின் ஒரு மூலையில் அமைதியாக அமைந்திருந்த விசாலமான வீடு. சென்ற வருடம் திருமணம் செய்துகொண்டு மனைவி கிருபாவுடன் ஈரோட்டில் இருந்தவர், மூன்று மாதங்களுக்கு முன் கோவையில் வீடமைத்துக்கொண்டு வந்திருக்கிறார். அருகிலேயே கவிஞர...

கரூர் டைரீஸ், பயணம் - 2

Image
                                                       நெடுந்தூரப் பயணங்களில் காத்திருப்புகள் என்னவாக இருக்கின்றன? மனம் நாம் அடைய எண்ணும் இடத்தை நோக்கிக் குவிந்திருக்கையில், அதை நாம் உதறிவிட்டு, அந்தக் காத்திருப்பு நம்மில் ஒரு எடையாக ஆகாமல் இருக்க பல செயல்களில் பாவனைகளில் மூழ்குகிறோம். ஆனாலும் விமான நிலையங்கள் முழுக்க இந்தக் காத்திருத்தலின் உஷ்ணத்தை உணரமுடிகிறது. கரூரை நோக்கிய என்னுடைய பயணம் ஒன்பதாயிரத்து எழுநூற்று எண்பது மைல்கள் கடந்த ஒன்று.  ஏப்ரல் 1, 2023 கொலம்பஸ் மாநகரின் புறநகரான டப்ளின் நகரில் காலை பதினொரு மணிக்கு மெல்லிய தூரலுடன் தொடங்கிய என் பயணம், கரூர் நகரின் புலியூர் காளிபாளையம் கிராமத்தை ஏப்ரல் 3, 2023 மதியம் பன்னிரண்டு மணிக்கு தகிக்கும் வெயிலில் அடைகையில் முடிந்தது. கொலம்பஸ் நகரின் ஜான் க்ளென் விமான நிலையம் - மூன்றரை மணிநேரக் காத்திருப்பு, ஒன்றரை மணிநேரப் பயணம் நியூ யார்க் நகரின் ஜே எஃப் கே விமான நிலையம் - ...

என் கவிதைகள் - வாசகன்

Image
                                                       மார்ச் 30, 2023 ஒரு மதுக்கோப்பையின் மீதான ஒரு தேனீர் குவளையின் மீதான பிரேமையில் பின்நவீனத்துவமும் அறமும் பிசிபிசுத்தது தேனீர் குவளையின் இனிப்பிற்கும் மதுக்குவளையின் மயக்கிற்குமாக ஓடி ஓடி ரீங்காரித்தது ஒரு ஈ.     - பாலாஜி ராஜூ

புரவி இதழ், மதார் கவிதைகள்

Image
                                                  குறிப்பு எழுதப்பட்ட நாள்: ஏப்ரல் 1, 2023 அன்புள்ள மதார், கவிதைகளை வாசித்தேன், மிகவும் கவர்ந்தன. முதல் கவிதை அதன் அமைப்பில், சொல்முறையில் பாடல்தன்மைகொண்டதாக, ஒரு நாட்டுப்புறப்பாடலைப் போன்று அமைந்துள்ளது. ஒரு மனதின் பிரயாசையை நேரடியாக வெளிப்படுத்தினாலும், கவிதையின் ஆழம், அது வாசகனுக்கு கடத்த விரும்பும் அனுபவம் என மிகத் தேர்ந்ததாக மாறிவிடுகிறது. நிழல் எத்தனை பூடகமானது! இரண்டாவது கவிதை ஒரு அறிவிப்புடன் தொடங்கி இயல்பாக விரிந்துகொள்கிறது. தற்செயல்களில்தானே கடவுள் ஒளிந்துகொண்டிருக்கிறான்! இங்கு ஈ அதன் முடிவை அடைந்துவிடுவதால் நிகழும் எதிர்பாராத ஒரு திடுக்கிடல் வாசிக்கும் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது. ஒரு காட்சி அல்லது அனுபவம் இயற்கை விதிகளின் மேலான விசாரமாக மாறுகிறது, தொடக்கமும் முடிவுமற்ற ஒரு ஆடலின் ஆழத்தை அறிந்துகொள்ள முடியாத ஏக்கமாக விரிந்து, கவிதையின் கடைசிப் பகுதியில் மிகப் பூடகமான தளத்திற்...