கல்லளை சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்
நண்பர் ஜெகதீஷ் குமார் எழுதிய கல்லளை சிறுகதை சொல்வனம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. சிறுகதையை குறித்து அவருக்கு எழுதிய கடிதம், அன்புள்ள ஜெகதீஷ், சிறுகதை முதல் வரியிலேயே துவங்கி, பரபரப்புடன் நகர்ந்து, கவித்துவமான, தத்துவார்த்தமான ஒரு முடிவுடன் நிறைகிறது. முதல் வாசிப்பில் தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதை ஒன்றை வாசிக்கும் உணர்வே ஏற்பட்டது. தடையில்லாத ஒழுக்கான நடை, அற்புதமான கதைசொல்லல் என முழுமையான ஒரு வாசிப்பனுபவத்தை அளித்த சிறுகதை. 'கல்லளை' எனும் தலைப்பு பொருத்தமாகவும், மிகுந்த அர்த்தத்துடனும் கதையைத் தாங்கி நிற்கிறது. இந்த தலைப்பே கதையை தனித்துவமான ஒன்றாக நிலைநிறுத்துகிறது, அவ்வளவு கூர்மை. அறிவின் பாதையைத் தேடுபவனான சித்தி குலத்தின் பஸ்தாவா, அதிகாரத்தின் ஆயுதத்தின் பாதையைத் நாடும் ஹொய்சால அரசின் வாரிசான ஹக்கா ராவ் என இரு கதைமாந்தர்களின் தேடலாகவே இந்த...