Posts

Showing posts from December, 2024

ஐஸ்கிரீம் - சிறுகதை

வெள்ளையம்மாவுக்கு மூன்று நாட்களாகவே அதிகாலையில் விழிப்பு தட்டிவிடுகிறது. அட்டாலியில் அடையும் சேவல் கூவவில்லை, மணி இன்னும் மூன்றாகியிருக்காது என்று கணித்தாள். தனக்கே உரிய சீரான முனகலுடன் சுழன்றுகொண்டிருந்த சீலிங் ஃபேன் சித்திரை மாத வெக்கையை பத்துக்கு பத்து ஓட்டுக் கூரை அறைக்குள் இறைத்துக்கொண்டிருந்தது.  சன்னலுக்கு வெளியில் இருந்த முருங்கைமரக் கிளைகளின் நிழல் உள்ளறைச் சுவற்றின் மீது மெல்ல அசைந்தது. வியர்த்திருந்த தன் கழுத்தை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே ஏறி இறங்கும் தன் மார்பகங்களைப் பார்த்தாள். அவளுடைய உடல் ஐம்பத்தைந்து என்ற கணக்குடன் அழுத்தமாக முரண்பட்டது. 'இதென்ன சனியன் ஐஸ்கிரீம் திங்கனும்னு மனசு தெனவெடுக்குது. பேரம் பேத்தி எடுத்த வயசுல ஏன் இந்த விசித்திரமான ஆசை. அன்னாடம் ஜாமத்துல இதே நெனப்பா இருக்குது' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள். வெள்ளையம்மா கடைசியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும், நினைவில் கூட கிட்டவில்லை. பேரனும் பேத்தியும் ஊர் திருவிழாக்களில் மகன் ராஜேந்திரன் வாங்கித் தரும் ஐஸ்கிரீமை முகமெல்லாம் பரப்பித் தின்பதை பார்ப்பதோடு சரி.  'கோலீப்பட எ...

இசூமியின் நறுமணம் - ஒரு வாசிப்பு

Image
                                                                 இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பை சென்ற வருடம் கரூர் வருகையில் வாங்கினேன். ஆனால் விமானத்தில் கொண்டுசெல்லவேண்டிய பொருட்களில் மற்றவை இடம் எடுத்துக்கொண்டதால் சில புத்தகங்களை கரூரிலேயே வைத்துவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வருட நவம்பர் மாதம் முழுக்க கரூரில் இருந்தேன். மனம் வாசிப்புக்கு அடங்காமல் திமிறிக்கொண்டிருந்தது. அரைமனதோடும் ஒருவித குற்றஉணர்வோடும் சிமெண்ட் அலமாரியில் இருந்த அட்டைபெட்டியை தூசுதட்டி, வைத்திருந்த புத்தகங்களில் அளவில் சிறியது என்பதால் இந்த தொகுப்பை வாசிப்புக்கு எடுத்தேன். ரா. செந்தில்குமார் ஜப்பானில் புலம்பெயர்ந்து வாழ்பவர், ஜெயமோகனின் வாசகர். சிலவருடங்களுக்கு முன் இந்த தொகுப்பின் வெளியீட்டு விழாவில் ஜெயமோகனின் உரையைக் கேட்டிருந்தேன். நான் இன்றைய சூழலில் எழுதும் அதிகம் பெயர் அறியப்படாதவர்களின் தொகுப்புகளை பரவலாக ...