மேசன்களின் உலகம் - கவிஞர் வேணு தயாநிதி
கவிஞர் வேணு தயாநிதி 'காஸ்மிக் தூசி' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். சொல்வனம் , அகழ் , பதாகை , kavithaigal.in போன்ற பல இணைய இதழ்களில் அவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. தன்னுடைய கவிதைகளைத் தொகுத்து அதன் வரைவை வாசிக்க அனுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய கடிதம் இங்கே, அன்புள்ள வேணு, தொகுப்பை இரண்டு முறை வாசித்தேன், பெரும்பாலான கவிதைகளை பலமுறை வாசித்துவிட்டேன். கவிதைகள் குறித்து தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்கிறேன். கவிதைகளை தொகுப்பாக வாசிக்கையில் கவிஞனுடைய அக மற்றும் புறச்சூழல் குறித்த சித்திரம் வாசகனின் மனதில் உருவாகிவிடுகிறது; அது ஒருவகையில் இயல்பானது என்றே எண்ணுகிறேன். எனக்கும் உங்கள் தொகுப்பை வாசிக்கையில் வேணு தயாநிதி எனும் கவிஞனுடைய சூழல் குறித்த ஒரு பார்வை கிட்டியது; அல்லது அதை நான் என்னுடைய வாசிப்பில் உருவாக்கிக்கொண்டேன். முதலில் புறச்சூழலைப் பார்ப்போம் – இதை...