விக்ரமாதித்யன் கவிதைகள் – விஷ்ணுபுரம் விருது கடிதம்
2021ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம். இந்தக் கடிதம் அவருடைய தளத்தில் 'செருக்கும் கலைஞன்' என்ற தலைப்பில் வெளிவந்தது. பிறகு விருது விழாவில் வெளியிடப்பட்ட 'நாடோடியின் கால்த்தடம்' விமர்சன நூலிலும் இடம்பெற்றது. கடிதம் எழுதப்பட்ட நாள் அக்டோபர் 15, 2021. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்படுவது மகிழ்வான செய்தி , தமிழின் தலைசிறந்த இன்னொரு கவிஞனைக் கொண்டாட ஒரு சந்தர்ப்பம் . விழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் . இது குறித்த பதிவுகளில் வெளிவரும் அவருடைய புகைப்படங்களையும் கூர்ந்து கவனிக்கிறேன் , புகைப்படக் கருவிகள் சில முகங்களிடம் மட்டும் அதீத வாஞ்சையுடன் இருந்துவிடுகின்றன . அவருடைய கவிதைத்...