Posts

Showing posts from January, 2026

உறைபனியின் கனவு - கவிதை

Image
                                                                 உறைநீர் ஏரியின் பொத்தலில் தூண்டில் அமிழ்த்திய மீனவக் கிழவன் கனவு காத்தான் குளிர் அங்கியினுள், நிலைத்த வெளியை குறுக்கு வெட்டிக் கீறியது சிறகு படபடத்த பறவை ஒன்று, ஏரிக்கரை பாலத்தின் பனி விரவிய தண்டவாளத்தில் வெம்மூச்சுடன் சீறியது இரயில் வண்டி ஒன்று, அக்கணம் சுண்டி அடங்கியது தூண்டில்  ஒரு முறை ஒரே ஒரு முறை மீனவக் கிழவனின் கனவு கலைத்து.

ஒரு நகரத்தின் ஓசை - கவிதை

Image
                                                                 கரிய தார்ச் சாலையை அனேகமாகக் கடந்துவிட்ட சாரைப் பாம்பின் மல்லாந்த நிர்வாணம், வாகனச் சீறலுக்கு அதிர்ந்தடங்கும் வயிற்றுத் துளை பாவிய தெருநாயின் நாசி தீண்டும் குருதி வாசம், மின்சாரத் தொடுகையில் நிலம் நாடிய அண்டங் காக்கைக்கு பலநூறு உறவுகளின் ஒப்பாரிச் சத்தம், வருகைப் பதிவுகளை முனவுகிற அலுவலகக் கதவுகளில் ஒரு நகரத்துக் காலையின்  முடிவுறா எக்காளம்.

இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு - கவிதை

Image
                                                                 அகழ் இதழில் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதிய ' இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு ' என்ற கவிதையின் தொடர்ச்சியாக எழுதியது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது குணா திரைப்படத்தை வெறுப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது தனிமை தகிக்கும் தொலைதூர மாலையில் அருவருப்பான தேனீர்  எனும் பான(க)த்தைக் குடித்து குமட்டுவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது பகல்நேர பேருந்து பயணங்கள் தீராமல் நீள்வதை மருட்சியோடு பார்ப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது திருவிழாக்களை கதவு சன்னல்களை மூடி புதுமையாகக் கொண்டாடுவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது வாழ்வின் பரிசான எதிர்பாராத் தருணங்களின் அழுகையை மௌனமாக நிகழ்த்துவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது மன அழுத்த மாத்திரைகளுக்கு அலமாராவில் தாராள இடமளிப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது காதுகளில...