பனி நிலமும், தனித்த பறவைகளும் - சொல்வனம் கட்டுரை
பனி நிலமும், தனித்த பறவைகளும் - வேணு தயாநிதி கவிதைகள் ஒரு கவிஞனின் முதல் தொகுப்பிற்கே உரிய பொதுப் பண்புகள் என எதையேனும் வகுத்துக்கொள்ள இயலுமா? தொகுப்பின் கால அளவு அவன் எழுதத் தொடங்கிய சில வருடங்களிலேயே நிகழ்ந்திருக்கும், வாசகனிடம் தன்னை நிறுவிக்கொள்ளவேண்டிய விழைவின் துடிப்பு வார்த்தைகளில் மின்னும், அவன் செல்லத் தொடங்கியிருக்கும் பாதையின் முந்தைய காலடி உதிர்மணல் கவிதைகளில் சிதறியிருக்கும், கவிதைகளில் இழையோடும் தத்துவநோக்கு கலங்கிய நீரடி மீன்களாகவே தென்படும். வேணு தயாநிதியின் முதல் தொகுப்பான ‘வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்’ இந்த பண்புகளில் எங்கு வேறுபடுகிறது? தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் சொல்வனம், பதாகை, கனலி, அகழ் என பத்தாண்டுகளுக்கு மேலாக இதழ்களில் வெளிவந்தவை - தொகுப்பின் மூத்த கவிதைக்கு பதினான்கு வயது. கவிதைகளில் தென்படும் நிதானமான பிரக்ஞைபூர்வமான மொழி ...