'Room in New York' ஓவியம் - அகழ் இதழ்

ஆசிரியர் ஜெயமோகன் புனைவு எழுதுபவர்கள் அகத்தூண்டுதலுக்கு காணொளிக் காட்சிகளைத் தவிர்த்து ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அகழ் இதழின் கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறேன். இந்த கட்டுரையில் எட்வர்ட் ஹாப்பர் என்ற ஓவியரின் ‘ Room in New York ’ ஓவியம் சார்ந்த குறிப்புகள் வருகிறது. இதில் நியூயார்க் நகருக்கே உரிய சிறிய அறை ஒன்று உள்ளது. அறையின் அளவுக்கேயான பெரிய சாளரத்தின் பின்ணணியில் ஒரு இணை தெரிகிறார்கள். மஞ்சள் நிற சுவர்களில் சில ஓவியச் சட்டகங்கள் மாட்டப்பட்டுள்ளன. அந்த ஆணின் உடை அவனை நடுத்தரவர்க்க அல்லது கணவான் என்று சொல்கிறது. எதிரில் இருக்கும் தன் துணையை தவிர்த்து நாளிதழில் மூழ்கியிருக்கிறான். இந்த ஓவியத்தில் குறிப்பிடத்தக்க காட்சியாக தெரிவது அந்த பெண்ணின் உடல்மொழி. எதிரில் இருப்பவன் தன்னில் மூழ்கியிருக்கையி...