ஒலி வடிவ புத்தகங்கள்
புத்தகங்களை ஒலி வடிவில் கேட்பதை நான் அதிகம் சிந்தித்ததில்லை. வாசிப்பு என்பது புத்தகங்களின் சொற்றொடர்களை கண்களால் மூளைக்கு அனுப்பி உள்வாங்குவது என்று மட்டுமே நான் எண்ணியிருந்தேன். அவ்வப்போது நண்பர்கள் பயணங்களில் ஒலிவடிவில் உரைகளையோ புத்தங்களையோ கேட்கும் வழக்கத்தை சொல்லியிருக்கிறார்கள். குளிர்காலத்தில் ஒன்றரை மணிநேரம் மாலையில் நடைப்பயிற்சி செல்லும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறேன். வழக்கமாக நடைக்கு நான் அலைபேசியை எடுத்துச்செல்வதில்லை. ஒன்று அதன் ஆகீத எடை, இன்னொன்று அலைபேசியிடமிருந்து ஒரு இடவெளியைக் கோரும் மனநிலை. கடந்த இருவாரங்களில் என் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வந்தன. நடைப் பயிற்சிக்கு செல்கையில் ஒரு சலிப்பு வருவதை தடுக்க இசை கேட்கலாம் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். Spotify Amazon Music என்று எல்லா தளங்களும் ம...