ரம்யா மனோகரன் கவிதைகள் - ஒரு கடிதம்

ரம்யா மனோகரன்: கவிதைகள் ரம்யா நலமா? முதலில் மன்னிப்பு கோருகிறேன். என்னிடம் வரும் படைப்புகளை முடிந்தளவு விரைவாக வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்துகொள்பவனாகவே இருந்திருக்கிறேன். உங்களுடைய கவிதைகளை வாசிக்க இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது முதல் முறை, எனக்கே சற்று உறுத்துகிறது. முன்னரே குறிப்பிட்டது போல சில பயணங்கள், அலைச்சல்கள். அப்புறம் எப்போதும் போல மனம் கவிதைகளை விட்டு முற்றாக விலகியிருந்த நாட்கள். எவ்வளவு விலகி இருக்கிறேனோ அதே அளவு வாஞ்சையோடு மீண்டும் ஈடுபடுபவனாகவும் இருக்கிறேன். என்னுடைய மனநிலை அப்படி, வேறொன்றும் பிரத்யேக காரணங்கள் இல்லை. சரி, சுய பிலாக்கணம் போதும் உங்கள் கவிதைகளுக்கு வருவோம். எண்ணிக்கையில் நான் நிறைய கவிதைகளை எதிர்பார்த்தேன், பதிநான்கு கவிதைகள் மட்டும் சுட்டியில் இருந்தன. மிகுந்த பிரக்ஞையோடு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறீர்கள் என்று ...