Deadpool & Wolverine - ஒரு Deadpool ரசிகனின் புலம்பல்
இயக்குனர் மார்டின் ஸ்கார்செஸி (Martin Scorsese) மார்வெல் திரைப்படங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை (Amusement Park Films) என சொல்லியிருந்தார். அழமான உணர்வுகளோ கதைக்களங்களோ அற்ற திரைப்பட உருவாக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கும் மலிவான ஆக்கங்கள் என்பதே அவருடைய பார்வை. மார்வெலின் சில திரைப்படங்களைக் காண முயன்று ஆழ்ந்து செல்ல இயலாமல் வெளிவந்திருக்கிறார். மார்வெல் திரைப்படங்கள் குறித்த என்னுடைய அனுபவமும் பார்வையும் அதுவே. என்னுடைய வாசிப்பை நான் காமிக்ஸ் புத்தங்களில் இருந்தே தொடங்கினேன். பெரும்பாலும் வன்மேற்கு நிலத்தைச் சார்ந்த கதைக்களம் அமைந்தவற்றையே அதிகமும் வாசித்தேன். சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் முகமூடி வீரார் மாயாவியையும் வாசித்திருக்கிறேன். இந்த புத்தகங்களில் கூட அடிப்படையான கதைக்களமும் இயல்பான மனித உணர்வுகளும் அமைந்திருக்கும். சூப்பர் ஹீரோ பாத்திரங...