Posts

Showing posts from January, 2025

ஐஸ்கிரீம் - சிறுகதை, சொல்வனம் இதழ்

Image
                                                                 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த என் சிறுகதை 'ஐஸ்கிரீம்'. ஐஸ்கிரீம் – சொல்வனம் | இதழ் 335 | 26 ஜன 2025 வெள்ளையம்மாவுக்கு மூன்று நாட்களாகவே அதிகாலையில் விழிப்பு தட்டிவிடுகிறது. அட்டாலியில் அடையும் சேவல் கூவவில்லை, மணி இன்னும் மூன்றாகியிருக்காது என்று கணித்தாள். தனக்கே உரிய சீரான முனகலுடன் சுழன்றுகொண்டிருந்த சீலிங் ஃபேன் சித்திரை மாத வெக்கையை பத்துக்கு பத்து அறைக்குள் இரைத்தது.  சன்னலுக்கு வெளியில் இருந்த முருங்கைமரக் கிளைகளின் நிழல் உள்ளறைச் சுவற்றின் மீது மெல்ல அசைந்தது. வியர்த்திருந்த தன் கழுத்தை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே ஏறி இறங்கும் தன் மார்பகங்களைப் பார்த்தாள். அவளுடைய உடல் ஐம்பத்தைந்து என்ற கணக்குடன் அழுத்தமாக முரண்பட்டது. 'இதென்ன சனியன் ஐஸ்கிரீம் திங்கனும்னு மனசு தவிக்குது. பேரம் பேத்தி எடுத்த வயசுல ஏன் இந்த விசித்தி...