சட்டகம் - கவிதை
ஆகஸ்டு 18, 2024 பரிசுத்தமான வானின் ஊதா நிற அதிசயங்கள் தாளாமல் மரத்தின் கிளையினூடாக மறைந்து காண்கிறேன், சாளரச் சட்டகங்களின் இடைவெளியில் ஒளிந்து காண்கிறேன், நீ ஒரு ஓவியத்தினுள் வாழ்கிறாய் என்று சொன்னது வானின் அசரீரி, இந்த ஓவியத்தில் நான் யார் என்று கேட்டேன் அதனிடம், 'ஓவியம் தாங்கும் சட்டகத்தின் விளிம்பில் கிறுக்கப்பட்டிருக்கும் வாசிக்க கிட்டாத பெயர் நீ' என்று சொன்னது அசரீரி. - பாலாஜி ராஜூ