On the Move: A Life - Oliver Sacks
சுய வரலாற்று புத்தகங்களை ஏன் வாசிக்கிறோம்? நவீன வாழ்வின் மனிதர்களுக்கு ஆர்ப்பாட்டமற்ற மாறாச் சுழல் போன்ற வாழ்வு அமைந்துள்ளது. அத்தகைய வாழ்வின் மிகவும் கணிக்கக்கூடிய நகர்வு விருப்பத்துக்குரியதாக இருந்தாலும் நாளடைவில் சிறிய சலிப்பு உருவாகிவிடுகிறது. இதில் சிலர் பயணம், கலை என புதிய பாதைகளில் பயணித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமாவதில்லை. மன அமைப்பு குடும்ப சூழல் என பல காரணிகள் இருக்கலாம். ஒரு புத்தக வாசகனும் மேற்குறிப்பிட்ட நவீன வாழ்வின் கட்டுக்களில் அகப்பட்டவனாகவே இருக்கிறான். சுய வரலாற்று நூல்கள் அத்தகைய கட்டுக்களில் இருந்து வெளியேற வாழ்வை மாற்றுக்கோணத்தில் அணுக பல பாதைகளை அளிக்கின்றன. சரி, யாருடைய சுய வரலாற்று அனுபவங்களை வாசிக்க விரும்புகிறோம்? நம் அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் விலகிய புதிய பாதைகளில் பயணிக்கும், பித்தும் அதி உத்வேகமும் அம...