சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - மறுவாசிப்பு
‘ மரணத்தை எந்தவிதமான தத்துவ உதவியுமில்லாமல் எதிர்கொள்ளும் மனிதன் எத்தனை பரிதாபகரமானவன் ’. சுந்தர ராமசாமியை தன்னுடைய ஆசிரியராக ஆத்மார்த்தமாக உணரும், அவருடைய இறுதிக்காலத்தைப் பற்றி மிகுந்த அக்கரையோடு விசனப்படும் ஜெயமோகனின் மனதில் ஊறிய சொற்கள் இவை. சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் மாலைநடை செல்கிறார்கள். விழுது பரப்பி நிற்கும் ஒரு ஆலமரத்தின் அடியில் திகைத்து நிற்கும் சுந்தர ராமசாமி முடிவின்மை குறித்து ஜெயமோகனிடம் மனம் பொங்கிப் பேசுகிறார், ‘பூமி முழுக்க நிறைஞ்சிருக்கிற உயிர் எவ்ளவு பயங்கரமா இருக்கு? மூர்க்கம்’. ‘சிருஷ்டி கொந்தளிச்சுண்டு இருக்கு’. தன்னுடைய இறப்பு அந்த ஆலமரத்தின் அடியில் நிகழவிருப்பதாக எண்ணியதையும் ஆலமரத்திடம உயிர்பிச்சை கேட்டதாகவும் அதிர்வுடன் சொல்கிறார் சுந்தர ராமசாமி. இந்த நூலின் கவித்துவம் மிக்க உச்ச தருணங்களில் ஒன்று இது. சுந்தர ராமசாமிக்கும் ஜெயமோகனுக...