தேவதேவன் இணைய சந்திப்பு - எனது உரை
அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 'கா.நா.சு. உரையாடல் அரங்கு' முன்னெடுப்பின் சார்பாக கவிஞர் தேவதேவனுடன் ஒரு இணைய சந்திப்பை நிகழ்த்தினார்கள். தேவதேவன் கவிதைகள் குறித்த ஒரு சிறு உரையை ஆற்றியிருந்தேன், அதன் காணொளிக்கான இணைப்பை இந்தக் குறிப்புடன் அளித்திருக்கிறேன். உரையாடலுக்கான முன்னேற்பாடாக ஒரு சிறு குறிப்பை எழுதி வைத்துக்கொண்டு அதைப் பலமுறை பேசி ஒத்திகையும் பார்த்திருந்தேன். ஒத்திகையில் ஏழு நிமிடங்களில் தொடங்கி பத்து நிடங்கள் வரை இந்த உரை அமைந்திருந்தது. பலமுறை பேசவேண்டியவற்றை மறக்கவும் செய்திருந்தேன், இன்னும் நன்றாக பயிற்சி செய்திருக்கலாமோ என்ற தவிப்பு தொடர்ச்சியாக இருந்தது. நான் பலர் முன் உரையாடுவதில் பழக்கமில்லாதவன், தவிர இயல்பான கூச்ச சுபாவியான எனக்கு இதில் சில சவால்கள் இருந்தன. முதலில் உரையை பேச்சு வழக்கில் அமைத்துக்கொள்ளலாமா அல்லது ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் நிகழ்த்துவதா என்ற குழப...